Categories: சினிமா

’அவன் ஒரு விஷயத்தை பத்து மடங்கு பெருக்கி சொல்வான்’.. தன்னுடைய நண்பர் செல்வராஜ் குறித்து ஜாலியாகப் பகிர்ந்த இளையராஜா!

Spread the love

தமிழ் சினிமாவிற்கு இளையராஜா என்ற ஜாம்பவானைக் கொடுத்தது ‘அன்னக்கிளி’ திரைப்படம். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புயலாக வந்தார் இளையராஜா. அதன் பின்னர் ஐம்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் மையப் பேசுபொருளாக இருந்து வருகிறார்.

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

அன்னக்கிளி படத்தின் வாய்ப்பை இளையராஜாவுக்குப் பெற்றுத் தந்தவர் எழுத்தாளர் அன்னக்கிளி செல்வராஜ். அவர்தான் இளையராஜா பற்றி பஞ்சு அருணாசலத்திடம் உயர்வாகப் பேசி அவரை சந்திக்க வைத்துள்ளார். அப்படிதான் இளையராஜா தன்னுடைய ட்யூன்களை பஞ்சு அருணாசலத்திடம் மேசையிலே வாசித்துக் காட்டி அந்த படத்தின் வாய்ப்பைப் பெற்றார்.

இந்நிலையில் அன்னக்கிளி செல்வராஜ் பற்றி இளையராஜா சுவாரஸ்யமான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் அன்னக்கிளி படம் ஒப்பந்தம் ஆகி பாடல் ரெக்கார்டிங் தயாராகிக் கொண்டிருந்தேன். இன்னும் பாடல் பதிவு செய்யப்படவே இல்லை. ஆனால் அவன் ஒன்றைப் பத்தாக்கி பெருக்கிசொல்வான். நான் வேலைப் பார்த்த ஜி கே வெங்கடேஷிடம் சென்று “அண்ணா ராஜா, பாட்டுல பின்னிட்டான் அண்ணா. இப்படி ஒரு பாடலை நான் கேட்கவே இல்லை” என்று புகழ்ந்து பேசிவிட்டான்” என நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

26 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago