Categories: சினிமா

விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ் விவகாரம்.. பிரபல தயாரிப்பாளரை ஏமாற்றிய ராயன்.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

Spread the love

இப்படியான நிலையில் தனுஷ் தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு கால் சூட் கொடுக்காமல் இழுத்தடிப்பது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் கதிரேசன். அதன் பிறகு தனுஷ் நடித்த ஆடுகளம் மற்றும் நையாண்டி போன்ற திரைப்படங்களை தயாரித்த இவர் 2023 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படியான நிலையில் தனுஷ் தன்னிடம் முன்பணம் வாங்கிக் கொண்டு கால்ஷூட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக அவர் புகார் அளித்தும் தனுஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஆர் கே செல்வமணி அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் five star creation பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்துகொண்டு தனுஷ் எங்களிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முன் பணம் பெற்றுக் கொண்டு இன்று வரை கால் சூட் தரவில்லை என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மன வேதனைகளையும் பதிவு செய்தேன். அதனைப் புரிந்து கொண்ட எங்களுடைய தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN Pictures ஆகாஷ் என் இட்லி கடை படப்பிடிப்பு நடக்க வேண்டும், மேலிடத்து உத்தரவு என்று கூறியதை மறந்திறோ? மேலும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கி தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்.

நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே தனுஷ் நடித்த பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகின்றேன். நீதி வழங்கத்தான் சங்கங்கள் உள்ளது, தங்களின் அரசியல் குறுக்கிட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் வலியை உணர்ந்த தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் வழியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலனை காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில் அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.

அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று கதிரேசன் பிரச்சனை செய்கிறார் என சொல்வது தங்களுடைய தனிப்பட்ட காழ்புணர்ச்சியை காட்டுகின்றது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சி இல்லாமல் பேச முடிகின்றது. எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்று தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கதிரேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 minute ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

9 minutes ago

“இனி கப்பல் வேண்டாம், லாரி போதும்”… உலக நாடுகளை அதிரவைத்த ஈராக் – சிரியா மூவ்… இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி எண்ணெய் தட்டுப்பாடு வராது…!

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…

14 minutes ago

“நான் ஜான்.. ஜாலியாக இருக்க வந்திருக்கிறேன்”… குளியலறையில் பதுங்கியிருந்த மர்ம நபர்.. கதவைத் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…

18 minutes ago

போக்குவரத்து நெரிசலால் டென்ஷன்… அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!

மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…

22 minutes ago

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

30 minutes ago