Categories: சினிமா

பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் கலக்கும் வீர தீர சூரன்.. படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்..!

Spread the love

விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. அதன் பிறகு இந்த திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்தனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் படம் மார்ச் 27ஆம் தேதி மாலை தான் வெளியானது. வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் இருந்ததால் சொன்னபடி இந்த திரைப்படம் அன்று காலை வெளியாகவில்லை.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிக்கல்களை சமாளித்து இந்த திரைப்படத்தை மாலை முதல் திரையரங்குகளில் வெளியிட்டனர். என்னதான் இந்த திரைப்படம் முதல் நாள் மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டாலும் வசூல் நன்றாகவே அமைந்திருந்தது. முதல் நாளில் வீர தீர சூரன் திரைப்படம் மூன்று கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் காலை முதலே படம் திரையிடப்பட்டு இருந்ததால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் எனக் கூறப்படுகிறது.  இருந்தாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் போக போக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை உலக அளவில் மொத்தமாக 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் வீர தீர சூரன் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் ஹீரோவாக நடித்த விக்ரம் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவரைத் தொடர்ந்து விக்ரமுடன் முதல்முறையாக இணைந்து நடித்த எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

அடுத்து மலையாள நடிகரான சூரஜ் வெஞ்சாராமூடு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த துஷாரா விஜயன் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். படத்தின் இயக்குனர் அருண்குமாருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாசுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் பட்ஜெட் 110 கோடி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

7 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

16 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

24 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

41 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

44 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

1 மணத்தியாலம் ago