ஸ்டேஜ்ல என்ன அவமானப் படுத்திட்டதா இளையராஜா நெனச்சாரு.. அதுக்காக என்னக் கூப்டு அப்படி கேட்டாரு- பார்த்திபன் பகிர்ந்த தகவல்!

By vinoth on மாசி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைக் குறைத்துக் கொண்டார் சீதா. ஆனால் பார்த்திபன் நடிகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

   

அவரின் இந்த பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். பார்த்திபன் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களைப் போல ஒரு இளையராஜா ரசிகர்.

   

 

இளையராஜா ரசிகர் என்பதை விட இளையராஜா ஆராதகர். அதனால் சில இளையராஜா இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதே போல பல நிகழ்ச்சிகளில் இசை பற்றி அவரோடு உரையாடியுள்ளார். அப்படி ஒரு உரையாடலின் போது பார்த்திபன் இசையைப் பற்றி இளையராஜாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு பதிலளித்த “உனக்கு இசையைப் பற்றி என்ன தெரியும்? அதுலாம் பெரிய விஷயம்? அதைப் பத்தியெல்லாம் கேக்காத’ என்று பதில் சொல்லிவிட்டார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்த்திபனைப் பலரும் கேலி செய்தனர். அதனால் சங்கடப்பட்ட இளையராஜா உடனே பார்த்திபனை அழைத்து “யோவ் நான் உன்ன இசையைப் பத்தி தெரியுமான்னு கேட்டேன்ல.. நீ என்கிட்ட அதே கேள்வியத் திருப்பிக் கேட்டு இருக்கணும் இல்ல? ஏன்னா எனக்கே இசையப் பத்தி எனக்கே தெரியாதுய்யா..’ என சொன்னார் என்று பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் பார்த்திபன்.