Categories: சினிமா

பாலு மகேந்திரா ரெண்டு படம் எடுப்பதற்குள் நூறு படத்துக்கு இசையமைத்து முடித்த இசைஞானி… மனுஷன் பேயா வேல செஞ்சிருக்காரே!

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜாவை தமிழ் சினிமாவில் அதிகம் ஆராதித்தவர்களில் ஒருவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் தன்னுடைய அழியாத கோலங்கள் மற்றும் கோகிலா படங்களைத் தவிர மீதமுள்ள எல்லாப் படங்களிலும் இளையராஜாவைதான் இசையமைப்பாளராக பணியாற்ற வைத்தார்.

பாலு மகேந்திராவின் மூன்றாவது திரைப்படம் மூடுபனி.அது இளையராஜாவுக்கு நூறாவது படம். இந்த 100 ஆவது படம் என்ற மைல்கல் குறித்து பேசியுள்ள இளையராஜா “பாலு மகேந்திரா அவரின் முதல் படத்தை இயக்கிய போது என்னிடம் வரவில்லை. அப்போது நான் அன்னக்களில் போன்ற சில படங்கள்தான் பண்ணிக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் அவரின் மூன்றாவது படமான ‘மூடுபனி’க்கு என்னிடம் வந்த போது நான் நூறு படங்களுக்கு இசையமைத்து விட்டேன்.

இந்த நூறாவது படம் என்ற செண்ட்டிமெண்ட் எல்லாம் நான் பார்க்கவில்லை. இப்போது நாம் மதுரையில் இருந்து சென்னைக்கு நடந்து வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு அடியையும் எண்ணிக்கொண்டேவா வருவோம். அது போலதான் அது அப்படி அமைந்தது.” என மிக எளிதாகக் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் 500 படங்கள், 1000 படங்கள் என்றெல்லாம் பேயாய் வேலை செய்து பல அரிய இசைப் படைப்புகளை நமக்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago