இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பணத்துக்காக தான் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது நாம் பணத்தை சேமித்து விட வேண்டும் என்று பல முதலீடுகளிலும் சேமிப்பு திட்டங்களிலும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஆனால் நம்மில் சிலருக்கு என்னதான் அதிக வருமானம் இருந்தாலும் பணத்தை சேமிக்க இயலாது. ஒருவர் சிலர் கையில் பணம் தங்காது. ஆனால் ஒரு சிலருக்கு இதுபோல கெட்ட பழக்கங்கள் இருந்தால் பணம் கையில் தங்காமல் போவதுண்டு. அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
கையில் பணம் தங்காமல் போவதற்கு இந்த கெட்ட பழக்கம் முக்கிய காரணம். அது என்னவென்றால் நாம் பார்க்கும் பொருளை எல்லாம் வாங்கும் பழக்கம் ஒருவருக்கு இருக்கும். அப்படிப்பட்ட பழக்கத்தை நீங்கள் வைத்துக் கொள்ளவே கூடாது. ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அது கண்டிப்பாக உங்களுக்கு தேவைப்படுகிற ஒரு பொருள் தானா அல்லது வீணான செலவா என்று யோசித்து வாங்க வேண்டும். ஒரு சிலர் சில்லறையாக செலவு செய்வதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி செய்யக்கூடாது. நீங்கள் சில்லறை செலவுகளையும் கணக்கெடுத்துக் கொண்டால்தான் நம்முடைய பணம் எவ்வளவு வீணாகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.
நம் கையில் பணம் தங்காமல் போவதற்கு நாம் யாருடன் பழக்கவழக்கம் வைத்திருக்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறையை அவமதிக்கும் நபர்களுடன் நட்பை வளர்க்கக்கூடாது. அதிக செலவு செய்பவர் உடன் நட்பு வைக்க கூடாது. அவர்கள் கெட்டுப்போவதுடன் நம்மையும் சேர்த்து கெடுத்து விடுவார்கள். யார் வாழ்க்கையை பற்றி முறையான திட்டமிடல் வைத்திருக்கிறார்களோ சேமிக்கும் பழக்கத்தை நம்மிடம் விதைக்கிறார்களோ அவர்களுடன் நட்புறவாக இருங்கள்.
உங்களிடம் சிறிது பணம் இருக்கிறது என்றால் அதை உடனடியாக திட்டமிட்டு ஏதாவது சேமிப்போ அல்லது முதலீடோ செய்து விடுங்கள். நீங்கள் யோசனை செய்து கொண்டே இருந்தால் அந்த பணம் செலவழிந்து விடும். மேலும் உங்களை எப்படி வளர்ச்சி அடைய செய்யலாம் உங்கள் பணத்தை பன்மடங்காக எப்படி பெருக்கலாம் என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். ஒரே வட்டத்திற்குள் ஓடிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக வளர முடியாது. வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் ஒரு சில ரிஸ்களை எடுக்க வேண்டும். அதன் தன்மை என்ன என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும். சில ஆபத்துகளை சந்தித்தால் தான் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும். இது போன்ற கெட்ட பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அதை உடனே தூக்கி எறிந்தால் உங்களலும் நிலையான ஒரு வருமானத்தை பெற்று சேமிக்கவும் முடியும்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…