BREAKING: கரூர் வழக்கு.. விஜய் கட்சியின் பெயர் மாற்றம்… அடுத்த பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த விவகம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் காவல்துறை பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆரில் விஜய் கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடே உற்றுநோக்கும் ஒரு சம்பவத்தின் முக்கிய வழக்கின் எஃப் ஐ ஆர் இல் உள்ள இந்த தவறை சுட்டிக்காட்டி காவல்துறையை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.