பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்குரிய சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் 30 இன்றைக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியை பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், அரசு இ சேவை மையங்கள், இணையதளம் , RTGS/NEFT, Pay-tm, நம்ப சென்னை செயலி, கிரெடிட், டெபிட், upi service, பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை இயந்திர மூலமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியால் குறிப்பிடப்பட்ட அரசு அலுவலகங்களில் உள்ள க்யூ ஆர் கோடு மூலமாகவும், whatsapp எண் 9445061913 மூலமாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
