தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்…… தமிழகத்தின் 23 வயது டிஎஸ்பி பவாநியா… வைரலாகும் பேட்டி……

By Begam

Published on:

அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஏழை பெண் பவாநியா தற்பொழுது தனது விடாமுயற்சியினால் தமிழகத்தின் இளம் வயது டிஎஸ்பி ஆக உருவாகியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீழ செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பவானியா. இவர் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. ஒரு அடிப்படை வசதியான சாலை கூட இவருடைய கிராமத்தில் சரியாக இல்லை. இவருடன் சேர்ந்து மொத்தம் 4 பெண் பிள்ளைகள் இவரது குடும்பத்தில்.சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்ட பவானியா எப்பொழுதும் முதல் மதிப்பெண் எடுக்க கூடியவர்.

   

தற்போது இவர் இளங்கலை கணிதம் படித்து பின்னர் குரூப் ஒன் எக்ஸாம் தேர்வு எழுதினார். அதில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார். பின்னர் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு அதிலும் செலக்ட் ஆகியுள்ளார்.  இதன் மூலம் அவர் தமிழகத்தின் 23 வயது இளம் டிஎஸ்பியாக உருவாகியுள்ளார்.

தற்பொழுது இவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் மாணவர்களுக்குதன்னம்பிக்கை ஊட்டும் அறிவுரைகளை கூறியுள்ளார். மேலும் இவர் தனது லட்சியம் மாவட்ட ஆட்சியர் ஆவதே அதற்காக மீண்டும் தேர்வு எழுதி அந்த பதவியை அடைவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். தற்பொழுது இவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோவாக பரவி வருகிறது.