மனித நாகரீகம் தோன்றிய காலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்து வந்தான். காடுகளில் வாழ்ந்த அவன் விலங்குகளுடன் நெருக்கமாக பழகினான். மனிதர்களும் விலங்குகளும் ஒரே இனம் போல காடுகளில் சுற்றி திரிந்தனர். பின்னர் நாகரிகம் வளர வளர மனிதன் நகர்புறத்தை நோக்கி வர காடுகள் தனித்து விடப்பட்டன.
விலங்குகள் மிகவும் பாசம் காட்டக் கூடியவை. நாம் காடுகளை அழிப்பதால் அவை நகர்ப்புறங்களை நோக்கி வருகின்றன. ஆனால் அவ்வாறு வரும் விலங்குகளை நாம் துன்புறுத்துகிறோம். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உருவான பந்தம் பழங்காலத்தில் இருந்து நிலவி வருகிறது.
விலங்குகள் மனிதர்களை பார்த்தால் பயப்படும் ஆனால் தனக்கு உதவி தேவைப்படும்போது அது மனிதர்களை தேடி வருகிறது. புரிந்து கொண்டவர்கள் அதற்கு உதவி செய்கிறார்கள். புரிந்துகொள்ளாதவர்கள் அதை அடித்து துன்புறுத்துகிறார்கள். இங்கு இரக்கமுள்ள சில மனிதர்கள் தன்னிடம் உதவி கேட்டு வந்த விலங்குகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறார்கள் என்று இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். தற்பொழுது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.