insta

Instagram ஐ அதிகம் பயன்படுத்தும் நபரா நீங்கள்…? உங்களுக்கு BrainRot நோய் இருக்கலாம்…

By admin on மார்கழி 24, 2024

Spread the love

இன்றைய காலத்து இளம் தலைமுறையினர் பல போலியான வாழ்க்கை முறையினால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். எப்படி வாழ வேண்டும் என்று தெரியாமல் அவர்களது இஷ்டத்திற்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதலாவதாக உடலை கெடுக்கக்கூடிய பாஸ்ட்புட் மோகத்துடன் இருக்கிறார்கள். அதுதான் Trend என நினைத்துக் கொண்டு நண்பருடன் வெளியில் ஜாலியாக செல்லும்போது பாஸ்ட்புட் கடைகளைத் தான் தேடி செல்கிறார்கள். உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள்.

   

அது மட்டுமல்லாமல் டுத்ததாக இளைஞர்களை ஆட்டி படைப்பது தற்போது instagram போன்ற சமூக வலைத்தளங்கள் தான். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரில் எங்கெங்கெல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்றில்லாமல் ஆபத்தான இடங்களில் சென்று ரீலிஸ் எடுத்து பலர் உயிரிழந்த செய்திகளை கூட நாம் பார்த்திருப்போம். இப்படி Instagram ஐ அதிகம் பயன்படுத்துபவர்கள் Instagram ரீல்ஸ்களில் நேரத்தை வீணடிப்பவர்களுக்கு Brain Rot எனப்படக்கூடிய ஒரு போய் பாதிப்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

   

இந்த Brain Rot நோய் என்பது சமூக ஊடங்களில் பயனற்ற ஆன்லைன் டகங்களை பார்க்க நேரம் செலவிடுவதை குறிக்கிறது. இந்த வார்த்தையின் பயன்பாடு இந்த ஆண்டு 230% அதிகரித்து இருக்கிறது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இந்த Brain Rot என்பது ஒரு நபரின் மனம் அல்லது அறிவுசார்நிலை மோசமடைவதை குறிக்கும் ஒரு வார்த்தையாகும்.

 

இந்த வார்த்தையை முதன் முதலில் ஹென்றி டேவிட் தாரோவால் 1854 இல் வால்டன் என்ற புத்தகத்தில் தான் இந்த வார்த்தை ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. சவால் மிகுந்த ஆழ்ந்த சிந்தனைகளுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுத்து மதிப்பே இல்லாத சமூகத்தின் போக்கை அவர் இந்த வார்த்தை வைத்து விமர்சித்து இருக்கிறார். தற்போது சமூக ஊடங்களால் இன்றைய இளம் தலைமுறையினர் பாதிக்கப்பட்டு வருவதை குறித்து தற்போது அதிகமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களின் மோகத்தால் இன்றைய இளம் தலைமுறையினர் செய்கிற வேலைகளை பார்க்கும்பொழுது இந்த Brain Rot என்ற வார்த்தை அவர்களுக்கு பொருத்தமாகத்தான் தெரிகிறது. இதே போல் நீங்களும் அதிகமாக Instagram போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால் அதை குறைக்க வேண்டிய நேரம் இது. இது உங்களது அறிவுத்திறனை குறைக்கும் என்று கூறப்படுகிறது.