2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகிவிட்டனர். இந்த வருடம் மக்கள் அனைவரும் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் அளவுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளன. முதல் ஆறு மாதம் மலையாள திரை உலகத்திற்கு பொற்காலமாக இருந்த நிலையில் அதன் பிறகு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் இந்த ஆண்டு சூடு பிடித்துள்ளது. 500 கோடி முதல் ஆயிரம் கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு வெளியான படங்களில் தேசிய விருதை வெல்லும் விதத்தில் தங்களின் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி மிரட்டிய 4 சிறந்த நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விக்ரம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தங்கலான். விக்ரம் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பார்வதி திருவோத்து கதாநாயகியாக நடித்திருந்தார். மாளவிகா மோகனன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் இயக்குனர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. பழங்குடி மக்களை ஆங்கிலேயர்கள் தங்கம் எடுக்க நிர்பந்தித்தது குறித்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாக சற்று தோல்வை சந்தித்தாலும் இந்த படத்திற்காக விக்ரம் போட்ட உழைப்பு பாராட்டைப் பெற்றது. இதனால் இந்த படத்திற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி:
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி கதாநாயகனாக இப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் 15 வயது மகளுக்கு அப்பாவாக நடித்திருந்தார். தன்னுடைய மகளை சீரழித்தவர்களை விஜய் சேதுபதி பழிவாங்க போராடுவது தான் இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஆகும். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவில் இதுவரை 110 கோடி வசூல் செய்துள்ள இந்த திரைப்படம் சீனாவிலும் ஐந்து கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்திருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி படத்தில் நடித்திருந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த படத்திற்காக சுமார் இரண்டு வருடம் ஒரு ராணுவ வீரர் மேற்கொள்ளும் பயிற்சிகளை எடுத்து தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருந்தார். அவர் போட்ட உழைப்பு தான் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது என கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்திவிராஜ்!
இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கிய நிலையில் துபாய்க்கு வேலைக்கு சென்று அங்கிருந்து தப்பிக்க போராடிய நஜீம் என்ற மனிதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. படகுடுவினரின் சுமார் ஆறு வருட கடின உழைப்புக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தில் பிரித்திவிராஜ் உடலை குறைத்து வெயில் பட்டு தோல் சுருங்கி போய் நிஜத்திலும் அதிக கஷ்டங்களை தாங்கி நடித்தார். எனவே இந்த பழத்திற்காக இவருக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி 2024 ஆம் ஆண்டில் இந்த சிறந்த நான்கு நடிகர்களில் கட்டாயம் ஒருவருக்கு தேசிய விருது கிடைக்கலாம் என்பது உறுதி.
