popcorn

என்ன ஆனாலும் தியேட்டர் Popcorn ருசியை அடிச்சுக்க முடியாது… இந்த Popcorn கலாச்சாரம் தியேட்டரில் நுழைந்தது எப்படி தெரியுமா…?

By Meena on டிசம்பர் 24, 2024

Spread the love

இந்தியாவில் பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கிய இடத்தை சினிமா பிடித்திருக்கிறது. அதேபோல் நடிகர் நடிகைகளுக்கும் இந்தியாவில் மவுசு அதிகம் தான். தங்கள் விருப்பப்பட்ட நடிகர்கள் படங்களை தியேட்டருக்கு சென்று ஜாலியாக படம் பார்ப்பதை பலர் விரும்புவர். அதுவும் தியேட்டருக்கு சென்று ஒரு பாப்கானை வாங்கி சாப்பிட்டால் தான் படம் பார்த்த திருப்தி இருக்கும் என்று பலர் கூறுவர். வேறு எங்கிலும் சாப்பிடுவதை விட இந்த தியேட்டரில் கிடைக்கும் Popcorn இன் ருசியை அடிச்சுக்கவே முடியாது.

   

நன்கு சுடச்சுட பொறித்தெடுத்த மக்காச்சோளத்தில் கொஞ்சம் உருக்கியா வெண்ணையை ஊற்றி அதன் மீது சுவையூட்டும் பொடிகளை தூவி நன்கு குலுக்கி தியேட்டரில் அமர்ந்து கொண்டு அந்த இருட்டு அறையில் நமக்கு விருப்பமான நாயகர்களின் படத்தை பார்த்துக்கொண்டே அந்த Popcorn சாப்பிட்டால் உலகில் இதை விட வேறு ஏதும் இன்பம் உண்டா என்று நினைக்க தோன்றும். தியேட்டருக்கு செல்லலாம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது Popcorn தான். அப்படி இந்த தியேட்டருக்குள் Popcorn கலாச்சாரம் வந்தது எப்படி ன்று உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.

   

மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளைக் கொண்ட மத்திய அமெரிக்கா தான் Popcornனின் தாயமாக கருதப்படுகிறது. ஏனென்றால் 1800களில் அங்கு தான் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டது. அங்கு விளைச்சல் அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி எந்த ஒரு கூடுதல் செலவும் இன்றி வறுத்தெடுத்து எளிமையாக செய்யக்கூடிய இந்த பாப்கான் அந்த நேரத்தில் விருப்பமான தின்ண்டமாக மாறியது.

 

அதைத்தொடர்ந்து பிரத்யேகமாக சிகாகோவில் சார்லஸ் க்ரெட்டாஸ் என்பவர் நீராவி எந்திரம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் பின்னர் பிரபலமான பாப்கார்ன் விற்பனை கண்காட்சிகள் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் தெரு விழாக்கள் திரையரங்குகளில் என அனைத்திலும் விற்பனை செய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தியேட்டரில் Popcorn தான் விற்பனை செய்தார்கள். அதை தொடர்ந்து தான் குளிர்பானங்கள் மிட்டாய்கள் மற்ற தின்பண்டங்களை சேர்த்தார்கள். இரண்டாம் உலகப் போர் நடந்த போது வீரர்களுக்காக சர்க்கரை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் மிட்டாய்கள் குளிப்பானங்கள் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்டது தடைப்பட்டது. அப்போது Popcorn தான் பிரதான தின்பண்டமாக தியேட்டர்களில் இடம் பிடித்தது.

அப்போது அமெரிக்காவில் பிரபலமாக இருந்த இந்த Popcorn கலாச்சாரம் 1930 40 காலகட்டத்தில் மெல்ல மெல்ல பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இப்படி அந்த காலத்தில் ஆரம்பித்த இந்த பாப்கான் கலாச்சாரம் இன்று வரை தியேட்டர்களில் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது. படம் பார்க்க செல்லும் முன்னரே ஒரு பக்கெட் Popcorn வாங்கிக்கொண்டு உள்ளே செல்பவர் பலர் இருக்கிறார்கள். அப்படி இதற்கு பல ரசிகர்களும் இருக்கிறார்கள்.