நான் படம் இயக்கும்போது என்னுடைய முதல் சாய்ஸாக அவர்தான் இருப்பார்… அரவிந்த் சுவாமி பகிர்ந்த நபர் யார் தெரியுமா?

By vinoth on டிசம்பர் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர்களில் ஒருவராக தளபதி படத்தின் மூலமாக அறிமுகமானவர் அரவிந்த் சுவாமி. அதன் பின்னர் ரோஜா என்ற திரைப்படம் அவரை இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக்கியது. அதன் பின்னர் பம்பாய் படம் அவரை சாக்லேட் பாய் கதாநாயகனாக்கியது. கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் அழகிய கதாநாயகனார்.

அதைத் தொடர்ந்து மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு, என் சுவாச காற்றே போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த்சுவாமி 2000 களின் ஆரம்ப கட்டத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த காலத்தில் அவர் தன்னுடைய பிஸ்னஸில் கவனம் செலுத்தி மிகப்பெரிய தொழில்முனைவோராக வளர்ந்தார்.

   

சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட 2012 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இப்போது தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். நவரசா ஆந்தாலஜியில் ஒரு படத்தை அவர் இயக்கியுமுள்ளார்.

   

 

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் படம் இயக்குவது பற்றிப் பேசியுள்ளார். அதில் “நான் 30 வருடங்களாக நடித்து வருகிறேன். அதனால் கிடைத்த அனுபவத்தால் என்னால் படம் இயக்க முடியும் எனத் தோன்றுகிறது. இப்போதே நான் இயக்கும் படத்தை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் சில சுவாரஸ்யமானக் கதாபாத்திரங்கள் வந்ததால் நடித்தேன்.

அதனால் டைம் கிடைக்கவில்லை. டைம் எப்போதுமே கிடைக்காது, நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சீக்கிரம் தொடங்குவேன் என நினைக்கிறேன். நான் படம் இயக்கினால் இசையமைப்பாளராகப் பணியாற்ற ஏ ஆர் ரஹ்மானைதான் முதலில் கேட்பேன். அவர் முடியாது என்றால்தான் நான் வேறு ஆப்ஷனுக்குப் போவேன்” எனக் கூறியுள்ளார்.