விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் கம்மியான நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர். இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதில் முதன்முதலாக தீபக்கின் மனைவி மற்றும் மகன் உள்ளே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். அடுத்ததாக விஷாலின் அப்பா அம்மா ஆகியோர் உள்ளே வந்துள்ளார்கள்.