திடீர் டுவிஸ்ட்..! மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேரலாம்… அதிமுகவில் ஆரம்பித்த அடுத்த பஞ்சாயத்து…!!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் நிலையில் அதிமுகவில் பனிப்போர் நிலவி வருகிறது. செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட்ட மோதலால் அடுத்தடுத்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவோம் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் குற்றசாட்டுகள் பொய்யானவை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது என கூறினார்.