“இனி 150 ஆண்டுகள் வாழலாம்” மனிதனின் ஆயுளை அதிகரிக்க புதிய மாத்திரை கண்டுபிடிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 11, 2025

Spread the love

உயிரினங்களின் இதய துடிப்பை பொறுத்து அவற்றினுடைய ஆயுட்காலம் மாறுபடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ‘ஆன்டி-ஏஜிங்’ என்ற புதிய மாத்திரை, எலிகளின் ஆயுளை அதிகரித்துள்ள நிலையில், இந்த மாத்திரையின் மூலம் மனிதர்களுடைய ஆயுளையும் 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

இந்த மாத்திரை வயதான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதன் மூலமாக மனிதனின் ஆயுளை நீட்டிப்பதாக லான்வி பயோசயன்சஸ் நிறுவனம் ஆராய்ச்சியின் மூலமாக தெரிவித்துள்ளது.