சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் நிலையில் அதிமுக விட்ட ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு போராடி வருகிறது. இதற்கான பணிகளை EPS தீவிரமாக செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுகவில் பெரிய அளவில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஒரு பகுதி செயலாளர் உட்பட 12 வட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாளை தெற்கு பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை உள்ளிட்டோர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அதிரடி மாற்றத்தை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்துள்ளார்.
