தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக எச்சரித்துள்ளார். சென்னையில் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முன்பே விஜய் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், மோசடி வழிகளில் முதலமைச்சர் பதவியை அடைய அவர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குதிரை பேரம் நடத்தும் நோக்கில் ஆளுநரிடம் போலி ஆவணங்கள் (Forgery) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தினகரன், அந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், விஜய் தரப்பு உடனடியாக அசல் ஆதரவுக் கடிதத்தைக் காட்ட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் விஜய் தனது போலித்தனமான நடவடிக்கைகளை மறைக்கப் பார்க்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…