அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “விஜய் எங்களுக்கு மாமனா, மச்சானா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், காமராஜ் அவ்வாறு கடிதம் எதுவும் அளிக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அந்த கடிதம் முற்றிலும் போலியானது என்றும் விளக்கமளித்துள்ளார். இந்தக் கடிதத்தை வெளியிட்டது யார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த போலி கடிதம் வெளியான செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தினகரன் தெரிவித்துள்ளார். “யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்று சாடிய அவர், அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். இதற்கிடையில், மெரினாவில் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவலால் கடற்கரைச் சாலையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கு ஒருவித பதற்றம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…
தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…