விஜய் மட்டும் அந்த உண்மையை சொன்னால்… உடனே பதவி விலகத் தயார்… அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் அதிரடி சவால்..!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி கடித விவகாரம் குறித்து மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ளார். சென்னையில் இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுகுறித்து ஊடகங்களுக்கு நேரடியாகப் பேட்டி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விஜய் இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லிவிட்டால், தாம் தனது பதவியை உடனே ராஜினாமா செய்யத் தயார் என்று அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தான் கையெழுத்திடுவது போன்று சமூக வலைதளங்களில் உலவும் வீடியோ குறித்து விளக்கம் அளித்த காமராஜ், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்று குற்றம் சாட்டியுள்ளார். அசல் ஆதரவுக் கடிதம் தன்னிடம் இல்லை என்றும், விஜய் தான் அந்த ஒரிஜினல் லெட்டரை பொதுவெளியில் காட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போலி ஆவணங்களைத் தயாரித்து அதன் மூலம் விஜய் முதலமைச்சர் பதவியை அடைய முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகத் டி.டி.வி தினகரனும் விஜய்யிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வீடியோவை எடுத்தது விஜய்யா அல்லது அவரது ஆதரவாளர்களா என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமமுக தரப்பு, விஜய் இது தொடர்பாக மௌனம் கலைத்து ஊடகங்களைச் சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

Soundarya

Recent Posts

“எல்லாரும் உடனே வாங்க” தவெக எம்எல்ஏக்களுக்கு விஜய் போட்ட உத்தரவு… பரபரக்கும் தமிழகம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…

39 minutes ago

BREAKING: அதிமுக MLA-க்கள் 6 பேர் மாயம்..? பயங்கர அதிர்ச்சியில் எடப்பாடி… நொடிக்கு நொடி பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…

44 minutes ago

திக் திக்..! ஒருபுறம் டிவி.. மறுபுறம் கடிகார முட்கள்… எப்போது அறிவிப்பார்..? திருமாவின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழ்நாடு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…

51 minutes ago

விஜய் எங்களுக்கு மாமனா..? மச்சானா..? எனக்கு அதை பார்த்ததும் ஒரே ஷாக்… TTV தினகரன் பரபரப்பு பேட்டி..!!

அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…

55 minutes ago

FLASH NEWS: விஜய்க்கு இன்று பதவிப்பிரமாணம் இல்லை… சென்னையில் உருவானது பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!!

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…

59 minutes ago

விஜய் செய்த போர்ஜரி வேலை… தைரியமிருந்தா அதை செஞ்சிருக்கலாமே… அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்த TTV..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…

1 மணத்தியாலம் ago