“உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்”…. டென்ஷனான தவெக தலைமை… விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும் தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஏற்கனவே இரு தொகுதிகளில் வெற்றி பெற்று, பின்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், “நான் நேரடியாகக் களத்தில் இறங்கினால் சூழல் அனைத்தும் சரியாகிவிடும்; எனவே எந்தத் தயக்கமும் இன்றி எப்போதும் போல் உங்கள் தேர்தல் பணிகளைத் தொய்வின்றிப் பாருங்கள்” என நிர்வாகிகளுக்குத் தைரியமும் நம்பிக்கையும் அளித்துள்ளார். இந்த அரசியல் நகர்வுகளும் வேட்பாளர் தேர்வும் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.