“நான் செத்தா இவங்கதான் காரணம்…” தவெக நிர்வாகி வெளியிட்ட அதிரடி மரண வாக்குமூலம்… தமிழக அரசியலில் வெடித்த பூகம்பம்…!

By Visaka on ஆடி 19, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் என்பவர், தான் இறக்க நேரிட்டால் அதற்கு தவெக நிர்வாகிகளே காரணம் என்று கூறி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட தன்னை அழைப்பதில்லை என்றும், திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், தனது மரணத்திற்கு காரணமானவர்கள் என்று சில நிர்வாகிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கட்சிப் பணிகளில் ரமேஷுக்கு நேர்ந்த அநீதி மற்றும் புறக்கணிப்புகள் குறித்து அவரது தாயாரும் ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது ரமேஷே நேரடியாக இத்தகைய விரக்தியான ஆடியோவை வெளியிட்டிருப்பது தவெக வட்டாரத்திலும் தருமபுரி பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.