நான் முகத்தை மூடினேனா?.. அன்னைக்கு நைட் உண்மையிலேயே நடந்தது இதுதான்… இபிஎஸ் பரபரப்பு பேட்டி…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்திருந்தார். அப்போது அவர் காரில் முகத்தை மூடியபடி சென்றது தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய தினம் இரண்டு நாட்களாக நான் டெல்லி சென்று வந்த பிறகு பல விமர்சனங்கள் வெளியாகி வருகின்றது.

நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 16ம் தேதி இரவு நான் அவரை சந்திக்க சென்றேன். என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சேர்ந்து சந்தித்து விட்டு வந்தோம். அப்போது இரவு 10 மணிக்கு எங்களோடு இருந்தவர்களிடம் நீங்கள் செல்லுங்கள் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று சொன்ன பிறகு அவர்கள் சென்று விட்டனர்.  நான் காலையில் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அப்போதும் அரசாங்க காரில் தான் பயணம் செய்தேன். நான் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காரில் தான் சென்றேன்.

அமித்ஷா வீட்டிலிருந்து நான் வெளியே வரும்போது என்னுடைய முகத்தை துடைத்தேன். அப்போது அதை எடுத்து அரசியல் செய்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இல்லையா. இன்னும் சொல்லப்போனால் நான் வருத்தத்தோடு சொல்கிறேன். இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட உங்களிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும். அப்படிப்பட்ட நிலைமைக்கு இன்றைய அரசியல் போய்விட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

5 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

6 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

6 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

6 மணத்தியாலங்கள் ago