விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், இதுவரை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாகக் கருதி வந்த ரசிகர்கள், இந்த வார நிகழ்ச்சியைச் சற்று ஆர்வமாகப் பார்த்து வருகிறார்கள். இதற்குப் பிரதான காரணம், பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ ஆகும். இதுவரை சாண்ட்ரா, கனி, கானா ஆகியோரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ள நிலையில், பார்வதி மற்றும் கம்ருதீன் குடும்பமும் இந்த வாரத்தில் உள்ளே வரவுள்ளார்கள்.
இந்தச் சீசனில் நட்சத்திர ஜோடியாகப் பிரஜன் – சாண்ட்ரா நுழைந்தார்கள். தற்போது சாண்ட்ரா வீட்டினுள் இருக்கிறார், பிரஜன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரஜன் பேசியதாவது: “சாண்ட்ராவும் நானும் விவாகரத்து வரை சென்றிருக்கிறோம். சாண்ட்ராவுக்கும் என் அம்மாவுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஒத்துப் போகவே இல்லை. ஒரு கட்டத்தில் இருவரையும் சேர்த்து வைக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சிக்கலில் சாண்ட்ரா மீது எந்தத் தவறும் கிடையாது. ஆனால், அந்த அழுத்தம் தாங்க முடியாமல் ஒருமுறை விவாகரத்து வரை சென்றோம். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக அது மாறியிருக்கும்” என்று கூறியுள்ளார்.
