உலக அழிவுக்குப் பிறகு பூமியில் மீண்டும் மக்களைக் குடியமர்த்துவதற்கு, பைபிளில் வருவது போல எட்டு நோவா பேழைகளைக் கட்டக் கடவுள் தன்னைப் பணியமர்த்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவரைப் பின்பற்றுபவர்கள், தங்கள் சொத்துக்களை விற்று அவருக்குப் பணத்தைக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், “என்னுடைய வேண்டுதலைக் கடவுள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அதனால் உலகை அழிக்கும் முடிவைக் கடவுள் ஒத்திவைத்திருக்கிறார். எனவே, தொடர்ந்து இன்னும் பல பேழைகளைக் கட்டப்போகிறேன்; அதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
பேழையைத் தேடி வந்த மக்களிடம், “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியாக இருங்கள்” என்று அவர் கூறினார். அவர் கடந்த மூன்று வருடங்களாகப் பேழை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டிக்கொள்கிறோம். ஆனால் கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். ‘நிறுத்து’ என அவருடைய குரல் கேட்கும் வரை பேழை கட்டி வருவேன். இறை வழிபாட்டுடன் எனக்கு ஆதரவு கொடுங்கள்” என்று தன்னைத் தேடி வந்தவர்களிடம் கூறினார்.
