இந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலர் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டனர். அதில் குடும்ப பாங்கான திரைப்படங்களும் நடுத்தர வர்க்கத்தின் வலிகளை பேசும் நகைச்சுவை கலந்த கதைகளை திரைப்படங்களாக தந்து பெயர் பெற்றவர் இயக்குனர் வி சேகர். ஒண்ணா இருக்க கத்துக்கணும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் நான் பெத்த மகனே பொங்கலோ பொங்கல் வரவு எட்டணா செலவு பத்தணா விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல சிறந்த படங்களை தந்தவர் வி சேகர் மறைவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது.
அதேபோல் இயக்குனர் மற்றும் நடிகர் நாராயணமூர்த்தி, புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட படங்களைத் தந்த இயக்குனர் வேலு பிரபாகரன், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, மதயானை கூட்டம் போன்ற சிறந்த படைப்பைத் தந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன், ஏப்ரல் மாதத்தில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற ஜனரஞ்சகமான படங்களை வழங்கிய எஸ்எஸ் ஸ்டான்லி போன்ற இயக்குனர்கள் இந்த 2025ம் ஆண்டில் மறைந்தனர் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
