எல்லா பிரச்சனையும் நான் தீர்க்கிறேன்… சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய போலி சாமியார்… கொடூர சம்பவம்..!

By Nanthini on ஆடி 20, 2025

Spread the love

இன்று என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் சில கிராமங்களில் இன்னும் மூடநம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. எல்லாமே சாமியார் கைகளில் தான் இருக்கிறது என்ற நம்பி பல மூட பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்றனர். ஒரு சில நேரங்களில் அதுவே பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் ஷியூர் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக போலி பாபா சஞ்சய் பகாரே என்பவர் ஆவி வெளியேற்றம், திருமண பிரச்சனைகளை தீர்க்கும் பெயரில் ஆண்கள் பெண்களை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் அவர்களை அடித்து சிறுநீரை குடிக்க வற்புறுத்தியும் தெரியவந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் சிலர் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலமாக இந்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த போலி சாமியார் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.