8 வயது சிறுவன் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை… நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆடி 20, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் சிறுவன் ஒருவன் கடத்தல் காரர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபய் என்ற எட்டு வயது சிறுவனை கடத்தி அவரது குடும்பத்தினரிடமிருந்து 80 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் சிறுவனின் கைகளையும் கால்களையும் வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இப்படியான நிலையில் கடத்தல் காரர்கள் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் பையில் புதைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள். எட்டு வயது சிறுவன் கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.