Categories: சினிமா

ரஜினி சாருக்காக நான் விஜய் பட வாய்ப்பை ஏற்கவில்லை… வீட்டில் சும்மா இருந்தேன்… நட்புக்கு உதாரணமான கே எஸ் ரவிகுமார்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவிகுமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை. இதில் குஷ்பு, மீனா, வினு சக்ரவர்த்தி, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் என மாறி மாறி படங்களை இயக்கினார் கே எஸ் ரவிக்குமார். ரஜினியோடு அவர் இணைந்து பணியாற்றிய முத்து மற்றும் படையப்பா ஆகிய இரண்டு படங்களும் சூப்பர்ஹிட்டாகின. அதையடுத்து மூன்றாவது முறையாக இணைய இருந்த படம்தான் ஜக்குபாய். ஆனால் அந்த படம் தொடங்கப்படாமலேயே கைவிடப்பட்டது.

#image_title

அதன்பின்னர் இருவரும் 2011 ஆம் ஆண்டு ராணா படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர். ஆனால் அந்த படம் ஷூட்டிங் தொடங்கிய நாளன்று ரஜினிகாந்துக்கு உடல்நிலை மோசமானதால் அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்றார். அந்த காலத்தில் கே எஸ் ரவிக்குமார் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அப்போது அவருக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் ரஜினி இப்படி இருக்கும்போது நாம் இன்னொரு படத்தை இயக்கச் சென்றால் காசுக்காக சென்றுவிட்டான் என்று பேசுவார்கள் என்பதால் நான் விஜய் படத்தை ஏற்கவில்லை என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஆனால் ரஜினி உடல்நலம் தேறிவந்த பின்னரும் ராணா திரைப்படம் எடுக்கப்படாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

vinoth

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

7 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

8 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

8 மணத்தியாலங்கள் ago