#image_title
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அவரே கதாநாயகனாக இருந்ததால் தனக்கான கதைகளை மட்டுமே எழுதவேண்டிய சூழல் வந்ததால் அவரால் இயக்குனராக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் ஜொலிக்க முடியவில்லை.
#image_title
இவரைப் போன்றே தமிழ் சினிமாவில் பல்துறை வித்தகராக ஜொலித்தவர் டி ராஜேந்தர். இவரும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு , இசை பாடல்கள் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று ஒரு கட்டம் வரை வெற்றிகரமாக செயல்பட்டவர். ஆனால் இவரும் 90 களுக்குப் பிறகு ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களின் வருகைக்கு முன்பு தமிழ் சினிமாவில் கதாசிரியர்கள் என்று தனியாக ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் கதை எழுதுவார்கள். அதை இயக்குனர்கள் திரைக்கதை அமைத்து இயக்குவார்கள். ஆனால் பாக்யராஜ் மற்றும் டி ராஜேந்தர் ஆகியோர் வந்தபோது, அவர்களே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார்கள். அவர்கள் அந்த ஸ்டைலில் வெற்றி பெற்றதால் அதையே அதன் பின்வந்த இயக்குனர்கள் தொடர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அதனால் ஒரு கட்டத்தில் எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவம் இல்லாமல் போனது. இப்போது இருக்கும் சொற்ப எழுத்தாளர்களுக்கும் மரியாதையோ சரியான சம்பளமோ கொடுக்கப்படுவதில்லை.
ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…
தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…