நீங்க என் அப்பா மாதிரி… வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி… தாயின் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, முத்துச்செல்வி கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் விளாத்திகுளம் அருகே உள்ள மாமுனியபுரத்தில் தனியாக வசித்து வந்தார். அங்கு வசித்துவந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமுருகன் என்பவருடன் முத்துச்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஐந்து வருடங்களாக இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துச்செல்வியின் 13 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அச்சிறுமி, வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதையும், அவர் கர்ப்பமாக இருந்ததையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை தங்ககுமாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த தந்தை, தனது மகளிடம் தனியாக விசாரித்தபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. தாய் வீட்டில் இல்லாத நேரங்களைப் பயன்படுத்திக் கொண்ட முத்துச்செல்வியின் கள்ளக்காதலன் முத்துமுருகன், சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்டதும், இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது. இக்கொடூரச் செயலால் நிலைகுலைந்து போன தந்தை, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துமுருகன் மீது உடனடியாகப் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இதுவரை உரிய நவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட தனது 13 வயது மகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றும், தலைமறைவாக உள்ள முத்துமுருகனை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தந்தை தங்ககுமார் கண்ணீருடன் மனு அளித்துள்ளார். தாயின் கள்ளக்காதலனால் பள்ளி மாணவி கர்ப்பமாக்கப்பட்ட இந்த அவலச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

14 minutes ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

21 minutes ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

25 minutes ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

34 minutes ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

38 minutes ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

49 minutes ago