நடிகர் அஜித்குமார் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கரூர் சம்பவத்தில் நான் தெரிவித்த கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டியை இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதை விட அவரவர் சுயநலத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், அரசியல் பத்திரிகையாளர்கள் என்று இருந்தார்கள். ஆனால் இப்போது சினிமா பத்திரிகையாளர்கள் அரசியல் மயமாகி விட்டார்கள். ஒரு சில ஊடகங்களால் அந்த பேட்டி அஜித்துக்கு விஜய்க்கும் நடக்கக்கூடிய மோதல், விஜய் அஜித் ரசிகர்களுக்கான போர் என்று சித்தரிக்கிறார்கள்.
முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியான படமாக இருந்தால் மட்டும் என்னுடைய படங்களை பாருங்கள் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். என்னுடைய படத்தை பாருங்கள் என்று மக்களை இன்புளூயன்ஸ் செய்ய மாட்டேன். ஓட்டு கேட்டு வரமாட்டேன். வாக்களிப்பது முக்கியமான கடமையாக பார்க்கிறேன் .மக்களாகிய நாம் உரிமைகளை பெற கடமைகளை செய்தாக வேண்டும். என்னுடைய பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிப்போர் அமைதியாக இருந்தால் நல்லது என்றுமே விஜய்க்கு நல்லது மட்டுமே நினைத்திருக்கிறேன், வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
