தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி முதல் விலை வேட்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதன் பிறகு தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேட்டி சேலை விநியோகம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல பச்சரிசி, வெல்லம், கரும்பு மற்றும் பரிசுத்தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் அடுத்த மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
