#image_title
பா ரஞ்சித் சென்னை ஆவடியில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் உள்ள அரசு நுண்கலை கல்லூரியில் பட்டம் பெற்றவர். கல்லூரி காலத்தில் இருந்தே திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த பா ரஞ்சித் பிலிம் சேம்பரில் சேர்ந்து உலக சினிமாவை பார்க்க தொடங்கினார். ஆண்டு தோறும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வார் பா ரஞ்சித்.
கல்லூரி படிப்பை முடித்த பின்பு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு இயக்குனர் சிவசண்முகத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பா ரஞ்சித். 2006 ஆம் ஆண்டு சிவசண்முகம் இயக்கிய தகப்பன்சாமி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தொடர்ந்து உதவி இயக்குனராகவே பணிபுரிந்து சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் பா ரஞ்சித்.
2011 ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். முதல் படமே நல்ல விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது. 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 2016 ஆம் ஆண்டு கபாலி 2018 ஆம் ஆண்டு காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் பா ரஞ்சித். 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவை வேறொரு கோணத்தில் பார்க்கச் செய்தார்.
இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனராக மட்டுமில்லாமல் நீலம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல படங்களை தயாரித்து உள்ளார் பா ரஞ்சித்.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சேத்து மான், பொம்மை நாயகி, ஜே பேபி ஆகிய திரைப்படங்களை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பா ரஞ்சித் கடவுள் நம்பிக்கை பற்றி பேசி உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் எனக்கு சிறுவயதிலிருந்தே கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. கடவுள் எனக்காக எதுவுமே செய்ததில்லை. ஒருவேளை நான் நினைத்தது நடந்திருந்தால் கடவுள் நம்பிக்கை வந்திருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதனால் இதுவரை எனக்கு கடவுள் மீது நம்பிக்கை கிடையாது என்று பகிர்ந்துள்ளார் பா ரஞ்சித்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…