“உன்னெல்லாம் சும்மாவே விடக்கூடாது”… பள்ளி மாணவியை காதலித்த திருமணமான இளைஞர்.. கட்டையால் அடித்து இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கி கொடூரமாக கொலை செய்த தந்தை…!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்த வடிவேலன் (27) என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். வடிவேலன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இதனிடையே களம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய ஷங்கர் என்பவருடைய மகள் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஷங்கரின் மகளுக்கும் வடிவேலுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவியை வடிவேலன் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த சங்கர் முதலில் பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வந்த மகளை கண்டித்துள்ளார். பிறகு தன் மகள் படிக்க வேண்டும் எனவே அவளை தொந்தரவு செய்யாமல் விலகி விடை என்று வடிவேலனை எச்சரித்தார். இதனை கண்டுகொள்ளாமல் வடிவேலன் தொடர்ந்து மாணவியரிடம் பேசி வந்ததால் அவர் மீது சங்கருக்கு கோபம் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அனந்தபுரம் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வடிவேலன் வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது ஷங்கர் வழிமறித்து, உன்னை எல்லாம் சும்மாவே விடக்கூடாது என்று கூறி வடிவேல் தலை மீது ஓங்கி கட்டையால் அடித்துள்ளார்.

இதில் துடி துடித்து கீழே விழுந்த வடிவேலன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தோம் ஆத்திரம் அடங்காத சங்கர் துடிதுடித்த வடிவேலன் மீது இருசக்கர வாகனத்தை இரண்டு முறை ஏற்று இறக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரே போலீசில் சரணடைந்தார். உயிருக்கு போராடிய வடிவேலனை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

6 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

16 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

28 minutes ago

அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…

42 minutes ago

“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…

51 minutes ago

மகளிர் உரிமைத் தொகையில் ட்விஸ்ட்… தவெக-வின் ரூ.2,500 திட்டத்திற்கு மக்கள் கொடுத்த மாஸ் தீர்ப்பு…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…

1 மணத்தியாலம் ago