அதிமுக-வா? காங்கிரஸா?… மெஜாரிட்டி மிஸ்ஸானால் தளபதியின் அடுத்த மூவ் என்ன?… கூட்டணி ஆட்சிக்கு விஜய் சம்மதிப்பாரா? … ஒரு விரிவான அலசல்”..!!!

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தனித்து களம் கண்ட தவெக போட்டியிட்ட இடங்களில் 111-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஒருவேளை தவெக பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டத் தவறினால், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழல் உருவாகும். குறிப்பாக, கொள்கை ரீதியாக திமுகவை “அரசியல் எதிரி” என்றும், பாஜகவை “கொள்கை எதிரி” என்றும் விஜய் அறிவித்துள்ளதால், அவர் யாருடன் கைகோர்ப்பார் என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.

ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, அதிமுகவுடன் இணைந்து தவெக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகிய இருவருமே முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால் இதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. ஒருவேளை பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக கழற்றிவிட்டால் மட்டுமே இந்த அசாத்திய கூட்டணிக்கு வழி பிறக்கும். அதே சமயம், பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் மாநிலத்திற்குள் வருவதைத் தடுக்க திமுக தவெக-வுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற ஒரு கணிப்பும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளதால், இக்கூட்டணிக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

மற்றொரு சுவாரஸ்யமான ஊகமாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பம் முதலே விஜய் மீது பாசிட்டிவ் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள காங்கிரஸ் மற்றும் தற்போதைய நிலவரப்படி 5 இடங்களில் முன்னிலை வகிக்கும் அன்புமணி ராமதாஸின் பாமக ஆகியவை விஜய்க்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரு சில இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், அவர்களின் ஆதரவு ஆட்சியைக் தீர்மானிக்கும் காரணியாக மாறலாம். தற்போது தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால், இறுதி முடிவுகள் வெளியான பின்னரே தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது உறுதியாகும்.

Muthu Mani

Recent Posts

BREAKING: கொளத்தூரில் விழுந்த கோட்டை!… சொந்தத் தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்டாலின்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…

6 minutes ago

“விஜய்யை முதல்வராக்கி விட்டீர்கள்!”… மகனின் மாபெரும் வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட தந்தை… எஸ்.ஏ. சந்திரசேகர் ஆங்கில ஊடகத்திற்கு கண்ணீர் மல்கப் பேட்டி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…

10 minutes ago

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

20 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

29 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

39 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

52 minutes ago