“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆதிக்கம்!… முதலிடத்தை பிடிக்கும் தவெக… கொண்டாட்டத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்”…!!!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடக்கத்திலிருந்தே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தற்போது வரை 112 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளதால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட சுமார் 1.5 கோடி வாக்குகளில், தவெக மட்டும் 50 லட்சம் வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் தள்ளப்பட்டுள்ள நிலையில், தவெக-வின் இந்த அதிரடி முன்னேற்றம் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

கட்சியின் இந்த அபார வெற்றியை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்கள் உற்சாகமாகக் கூடி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள இந்த அங்கீகாரம் அவரது குடும்பத்தினரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவுகள் தற்போது தவெக-விற்குச் சாதகமாகத் திரும்புவதால், தமிழகத்தின் அடுத்த ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்யின் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

BREAKING: கொளத்தூரில் விழுந்த கோட்டை!… சொந்தத் தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்டாலின்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…

11 minutes ago

“விஜய்யை முதல்வராக்கி விட்டீர்கள்!”… மகனின் மாபெரும் வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட தந்தை… எஸ்.ஏ. சந்திரசேகர் ஆங்கில ஊடகத்திற்கு கண்ணீர் மல்கப் பேட்டி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…

15 minutes ago

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

25 minutes ago

“9-வது முறையாக அசுர சாதனை!… திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளிய தவெக… கோபிசெட்டிபாளையத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அபார வெற்றி”…!!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…

34 minutes ago

“சரித்திர வெற்றிக்கு வாழ்த்துகள் அண்ணா!”… தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்!… ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…

44 minutes ago

“விஜய்யின் விஸ்வரூபம்…110 இடங்களை தட்டித்தூக்கிய தவெக… தனி ஆளாக நின்று சாதித்த விஜய்… எஸ்.ஏ.சி சொன்ன அந்த ரகசியம்”…!!!

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…

57 minutes ago