டெல்லியில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில், ஒரு ஜோடியின் ஹல்தி திருமண நிகழ்வு தவறாக நடந்ததால், அவர்கள் வைத்திருந்த ஹைட்ரஜன் பலூன்கள் தீப்பிடித்து எரிந்து, மணமகன் மற்றும் மணமகள் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை தம்பதியினர் பகிர்ந்து கொண்டதை அடுத்து, இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது. இந்த வீடியோவில், ஹைட்ரஜன் பலூன்களை கையில் ஏந்தியபடி தம்பதியினர் பிரமாண்டமாக நுழைகிறார்கள்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்களைச் சுற்றி வண்ணத் துப்பாக்கிகள் சுடப்பட்டன. அப்போது வண்ணத் துப்பாக்கிகளில் ஒன்று தற்செயலாக மேல்நோக்கிச் செலுத்தப்பட்டது. அந்த வெப்பத்தில் பலூன்களுடன் வினைபுரிந்து, வெடிக்க்க தொடங்கியுள்ளது. சில நொடிகளில், அனைத்து பலூன்களும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதால் விருந்தினர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் மணமகளின் முகத்திலும் முதுகிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மணமகன் விரல்களிலும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன. வெடிவிபத்தில் இருவருக்கும் முடி உதிர்ந்தது. தவறான செயலால் திருமண நிகழ்வு சோகமாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…