“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அப்துல்லாபூர் பகுதியைச் சேர்ந்த மனீஷ் என்பவருக்கும் அவரது மனைவி கவிதாவுக்கும் இடையே, மாற்றுத்திறனாளியான தங்களது மகனுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனீஷ், கத்தியால் தனது மனைவி கவிதாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுப் போலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

மற்றொரு சம்பவத்தில், பதேஹுல்லாபூர் பகுதியைச் சேர்ந்த சந்த் முகமது என்பவர், தனது மனைவி ஷைஸ்தாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், வீட்டில் இருந்த துண்டால் மனைவி ஷைஸ்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அவனும் போலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளான்.

   

ஒரே நாளில் இரு கணவர்கள் தங்களது மனைவிகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு போலிசிடம் சரணடைந்த இச்சம்பவங்கள் மீரட் பகுதி மக்களை உறைந்து போகச் செய்துள்ளன. மீரட் போலிஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.