இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி பேச்சுவார்த்தைகளே முதன்மை காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசிய ஜான் ஆரோக்கியசாமி, “எங்களது தலைவர் விஜய்க்கு உங்கள் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது.

சௌமியா அன்புமணியை அமைச்சராக்க அவர் விருப்பம் கொண்டுள்ளார்” என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும், தேர்தல் களத்தில் தவெகவுக்கு எதிரான நிலையைத் தவிர்த்து, தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணிக்குத் தயாராகுமாறு அன்புமணிகளிடம் அவர் முன்வைத்த கோரிக்கையை அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே, பாமக இந்த இடைத்தேர்தலில் நடுநிலை வகிக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.