“அம்மாவை அப்பா எப்படி கொன்னாருன்னா…”  கட்டிலில் கட்டி போட்ட கணவர்… 4 வயது சிறுவனின் பகீர் வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

தெலுங்கானாவின் ஹனுமகொண்டா கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அனில் என்பவர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரஜிதா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தன் மனைவி மீது ஏற்பட்ட நடத்த சந்தேகத்தால் அனில் தினமும் அவரைத் தாக்கி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்த நிலையில், ஆத்திரமடைந்த அனில் மனைவியின் கை, கால்களை கட்டிலில் கயிற்றால் கட்டி வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ரஜிதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது. இது குறித்துத் தகவலறிந்த காகதியா பல்கலைக்கழகப் போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவத்தில், “அம்மாவை அப்பா எப்படி கட்டிலில் கட்டிப்போட்டுக் கழுத்தறுத்தார்” என்று அவர்களின் நான்கு வயதுச் சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய அனிலைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், தாய் உயிரிழந்து தந்தை தலைமறைவானதால் இரு குழந்தைகளும் அனாதையாகப் பரிதவித்து நிற்கின்றன.