பகீர்… ஆசிரியை பள்ளி வாசலுக்கே அழைத்து கழுத்தறுத்துக் கொலை… முன்னாள் மாணவனின் வெறிசெயல்… சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்…!!

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சிக்ரோனா பகுதியில் ஜூன் 29 அன்று காலை 9:30 மணியளவில் பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளிக்கு வந்த நபர் ஒருவர், அங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்த சந்தியா என்பவரைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். சந்தியா பள்ளி வாசலுக்கு வந்ததும், அவரை தந்திரமாக வெளியே வரவழைத்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

அப்போது அருகில் இருந்த மற்றொரு நபர் தடுக்க முயன்றபோது, கொலையாளி கத்தியைக் காட்டி அவரையும் மிரட்டிப் பின்வாங்க வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சந்தியாவின் தொண்டைப் பகுதியில் மீண்டும் கடுமையாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த சந்தியாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2084322481813495895/video/1

   

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட நபர் அப்பள்ளியின் முன்னாள் மாணவரான அமித் என்பதை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்தனர். அமித், ஆசிரியை சந்தியாவை காப்பதாகக் கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொடூர தாக்குதல் தொடர்பான காட்சிகள் அனைத்தும் பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.