ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், சந்தியா என்ற 26 வயது மதிக்கத்தக்க ஆசிரியை, தன்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த 21 வயது இளைஞனான அமித் என்பவனால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகத்தை துணியால் மூடிக்கொண்டு பள்ளிக்கு வந்த குற்றவாளி அமித், ஆசிரியையின் கணவர் வந்திருப்பதாக பள்ளி ஊழியர்களிடம் பொய் கூறி அவரைப் பள்ளியின் பிரதான நுழைவாயிலுக்கு வரவழைத்துள்ளான். இந்த வார்த்தையை நம்பி ஆசிரியை சந்தியா வெளியே வந்த மறுகணமே, குற்றவாளி அவரைத் தன்னிடம் இருந்த கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளான்.
https://twitter.com/AnuragChaddha/status/2084540709353165128/video/1
இச்சம்பவத்திற்கு முன்பாகவே, அமித் அந்த ஆசிரியையைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்துப் புகாரளிக்கப்பட்டு, கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்ட போதிலும் அவன் தனது செயலை நிறுத்தவில்லை. இந்நிலையில், இந்தக் கொலையை அரங்கேற்றிய குற்றவாளி அமித்தை, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளனர்.
