மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கட்டடத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு, உடலெங்கும் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டுப் போலிஸார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஆகாஷின் உடல்நிலை சீரான பிறகு, அவர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் புனே போலிஸார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணி மனைவியை மென்பொருள் பொறியாளரே கழுத்தை அறுத்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
