ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா என்பவருடன் ஹைதராபாத் வந்துள்ளார். இவர்கள் இருவரும் மாதப்பூர் சித்திக்கு நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலையில் நிகிதாவிற்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி, ரவி தேஜாவும் ஓட்டல் ஊழியர்களும் சேர்ந்து அவரை கொண்டாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவர்கள் அவர் இறப்பை உறுதி செய்த மறுநிமிடமே காதலன் ரவி தேஜா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

   

தகவலறிந்து வந்த மாதப்பூர் போலிஸார், உயிரிழந்த நிகிதாவின் முகம் மற்றும் தலைப் பகுதியில் கடுமையான காயங்கள் மற்றும் வீக்கங்கள் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையைச் சோதனையிட்டபோது சுவர்கள் மற்றும் மெத்தைகளில் ரத்தக் கறைகள் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காதலனே அவரை அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ரவி தேஜாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.