விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சரவணக்குமார் (26), தனது மனைவி பொன்னழகு (21) மற்றும் அவருடன் நெருங்கிப் பழகி வந்த ஆனந்தராஜ் (30) ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியும் கற்களால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஒரே பகுதியில் கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில் பொன்னழகுக்கும், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஆனந்தராஜுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. இதனை அறிந்த சரவணக்குமார் இருவரையும் பலமுறை கண்டித்தும் அவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாததால், இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு வீட்டை விட்டு வெளியே செல்வதாகக் கூறிச் சென்ற சரவணக்குமார், எங்கும் செல்லாமல் வீட்டிற்கு அருகிலேயே மறைந்திருந்து கண்காணித்துள்ளார். கணவன் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட ஆனந்தராஜ் வீட்டிற்குள் நுழைந்து பொன்னழகுடன் தனிமையில் இருந்துள்ளார். சற்று நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் ஒன்றாகப் பார்த்த சரவணக்குமார், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று வீட்டிலிருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியதுடன், ஆத்திரம் அடங்காமல் கற்களாலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பொன்னழகு மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரவணக்குமார் – பொன்னழகு தம்பதியின் 3 குழந்தைகளும் திடுக்கிட்டு எழுந்து பயத்தில் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித் திரிந்த சரவணக்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட இந்த விபரீத முடிவால், தற்போது இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5 குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. தாயைக் கொலை செய்த வழக்கில் தந்தையும் சிறைக்குச் சென்றுவிட்டதால் சரவணக்குமாரின் 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், ஆனந்தராஜின் உயிரிழப்பால் அவரது மனைவி காஞ்சனாவும் 2 ஆண் குழந்தைகளும் தங்களது குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். ஒரு கணம் ஏற்பட்ட ஆத்திரம் இரண்டு குடும்பங்களின் நிம்மதியையும் சிதைத்து, ஐந்து பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பல கோடி சிவப்பு நண்டுகளின் வருடாந்திர இடப்பெயர்வு 2026 நவம்பர் 13 அன்று தொடங்கியது. பருவமழையின்…
ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி பகுதியில் 57 வயது முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற…
காந்திநகர் மாவட்டத்தின் தேகாம் தாலுகாவிற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா சோலங்கி (21). திருமணமான இவர் தனது கணவருடன்…
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…