தமிழக முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியான ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ், திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்குவதற்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதைப் பூர்த்தி செய்திருப்பதோடு, மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், திருமண நிதியுதவிக்கான வேறு எந்த அரசுத் திட்டங்களிலும் அவர் பயன் பெற்றிருக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 05.10.2026 முதல் 15.01.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கச் சிறப்பு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பச் செயல்முறையின்போது விண்ணப்பதாரரின் ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண்கள் சரிபார்க்கப்பட்டு, திருமணப் பத்திரிகை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தகுதியான விண்ணப்பங்களுக்குத் தனித்துவ அடையாள எண் வழங்கப்படுவதுடன், அதன் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாகும்; ஒருவேளை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை அறிந்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இல்லாத பெண்கள் உடனடியாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பித்து, எண் ஒதுக்கப்படும் வரை மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு வழிகாட்டியுள்ளது. அதன்படி, ஆதார் பதிவு அடையாளச்சீட்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம் அல்லது அரசு அதிகாரி வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி, மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில்,…
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…