மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த கணவன், 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் மாரடைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் என்ற நபர், போதை தலைக்கேறிய நிலையில் 23 வயதான தனது மனைவி ஹீரா பாயை மிருகத்தனமாக தாக்கியுள்ளார். இந்த கொடூரத்தின் உச்சமாக, அவர் தனது மனைவியின் ரகசிய உறுப்பில் 10 இன்ச் நீளமுள்ள இரும்பு கம்பியை திணித்து சித்திரவதை செய்துள்ளார்.
இந்த கொடூர தாக்குதலின் காரணமாக, அந்தப் பெண்ணின் உடலிலிருந்து அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஹீரா பாய் மற்றும் அவரது வயிற்றில் வளர்ந்து வந்த 3 மாதக் குழந்தையும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவியின் மரணத்திற்குப் பிறகும் இரக்கமின்றி செயல்பட்ட பிரதீப், அவரது உடலை ஒரு பைக்கில் கட்டி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் 16-க்கும் மேற்பட்ட கடுமையான மற்றும் கொடூரமான காயம் பட்ட தழும்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதநேயமற்ற இந்த கொடூரச் செயலைச் செய்த கணவன் பிரதீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
