விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா மகன் சாதிக் பாஷா (28). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர்களான ஷேக் அமானுல்லா, ஆஷிக் இருவருடன் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர்கள் சாதிக் பாஷாவை பின்புற தலையில் பலமாக வெட்டியத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்கள்.இந்த கொலையையறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாதிக் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் காவலதுறையினர் திண்டுவனத்தில் உள்ள முருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா என்பவரை கைது செய்துள்ளார்கள்.அவரிடம் நடத்திய விசாரணையில் .
இவர் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த அவர் தன் மாமியார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கூனி மேட்டு கிராமத்திலேயே தனி வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது கூனிமேடை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷாவுக்கும், ரஹ்மத்துல்லா அவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்தும் வந்துள்ளனர். இதனை அறிந்த ரஹ்மத்துல்லா, சாதிக் பாஷாவை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். அவர் கள்ளக்காதலை கைவிடாததால்.இந்நிலையில் சாதிக் பாஷா கூனிமேட்டில் இருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான திண்டுவனத்தில் உள்ள முருகம்பாக்கத்திற்கு சென்றனர். மேலும் இதனை அறிந்த சாதிக் பாஷா கள்ளக்காதலை விடாமல் இருந்து கள்ளக்காதலியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட ரகமதுல்லா கோபமடைந்து சாதிக் பாஷாவை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சாதிக் பாஷா தனது வீட்டில் அருகே உள்ள கடற்கரையில் ஓரமாக அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். இந்த தகவலை தெரிந்து கொண்ட ரஹ்மதுல்லா தன்னுடைய கூலிப்படையான விக்ரவண்டி கலித்திரம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாரதிதாசன் (22), ஆனந்த் ராஜ் (21), வானூர் சின்ன அம்மன் குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குணசேகரன் (22), ஆகியோர் சேர்ந்து சாதிக் பாஷாவை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
